×

ஊரடங்கு அறிவிப்பில் அரசு அலட்சியபோக்கு: எஸ்.இருதயராஜன், பேராசிரியர் மற்றும் வெளிமாநில தொழிலாளிகள் குறித்த ஆராய்ச்சியாளர்

2011ம் ஆண்டின் புள்ளிவிரம் படி, இந்தியாவில் 450 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்,  வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதாவது 3 இந்தியர்களில் ஒருவர் இடம் பெயர்ந்து வாழ்பவர்களாக உள்ளனர். அதாவது பிறந்த இடத்தில் வாழாதவர்கள் இரண்டு விதமாக கூறினால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்பவர்கள் என கூறப்படுகிறது. வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் மாநிலங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஒரிசா, மேற்குவங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து அதிகப்படியான மக்கள் இடம் பெயர்ந்து வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

அதிகமானோர் சென்னை, மும்பை, டெல்லி  போன்ற பெரிய நகரங்களுக்கு சென்று வேலை செய்து வந்தனர்.  தற்போது இதுபோன்ற இடங்களுக்கு சென்றவர்கள் தான் கொரோனாவால் அதிகம் கஷ்டமடைந்துள்ளனர். பொதுவாக இடம் பெயர்ந்து செல்வதற்கு ஒரே காரணம், சம்பாதியத்திற்கு, வருமானம் ஈட்டவே இதுபோன்ற மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்து வேலை செய்கின்றனர். குறிப்பாக ஒரிசா போன்ற மாநிலங்களில் ஒரு வேலை செய்தால் ரூ.150 சம்பளம் என்றால், அதுவே தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் ரூ.500 வரை சம்பளம் கிடைக்கும்.

முன்பெல்லாம் வெளி மாநிலத்தவர்கள் வந்தால், ஒரு சில தொழில்களுக்கு தான் வந்தார்கள், ஆனால் தற்போது, சென்னையை பொறுத்தவரை, வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாத, இடமே இல்லை, செய்யாத தொழிலே இல்லை. துணி கடை, காபி கடை, பூக்கடை, ஹோட்டல் மேலும் கட்டிட தொழில், பல்வேறு வேலைகள் என அனைத்திலும் இருக்கிறார்கள். வெளிமாநில தொழிலாளர்கள் என்றாலே எல்லா வேலையும், எந்த நேரத்திலும் செய்ய தயாரானவர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களை வைத்து சின்ன முதலாளிகள், பெரிய முதலாளிகள், பெரிய கட்டுமான நிறுவனங்கள் என எல்லாம், அதிகபடியான லாபங்களை பார்த்தனர். அதிக வேலை வாங்கி சரியான சம்பளம் கொடுக்காமல், கொடுமைகளும் செய்த முதலாளிகளும் உண்டு.

வேலை செய்த போது செய்த கொடுமையை விட, தற்போது கொரோனா நேரத்தில் செய்தது தான் மிகப்பெரிய கொடுமை. முதலாளிகள் கைவிட்டதின் விளைவு தான், மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சாலைகளில் நடந்து சென்றது, ரயில் தண்டவாளத்தில் இறந்தது. குழந்தைகள் நடந்து சென்றது என வெளியான காட்சிகள். இந்த கோர சம்பவங்களுக்கு முக்கிய காரணமே முதலாளிகள் தான். இப்போது சொந்த மாநிலங்களுக்கு சென்றவர்கள், திரும்ப வருவது என்பது குறைவு தான் அப்படி வந்தால், ஏற்கனவே வேலை செய்த முதலாளியிடம் வரமாட்டார்கள். அப்படி வர வேண்டும் என்றால், ஏற்கனவே தர வேண்டிய சம்பளம் மற்றும் முன்பணம் உள்ளிட்டவை கொடுத்தால் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி அழைத்து வரவில்லை என்றாலும் எல்லா தொழிலும் பாதிக்கும். பல பணிகள் வெளி மாநில தொழிலாளர்கள் இல்லாமல் நின்று போய் உள்ளது. ஆட்கள் தட்டுபாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிப்பிலும் அரசு முறையாக செயல்படவில்லை. அலட்சியப் போக்கு காணப்பட்டது.  ஊரடங்கு அறிவித்த போதே வெளிமாநில தொழிலாளிகள் செல்வதற்கு 5 நாட்களாவது அவகாசம் அளித்திருக்க வேண்டும். கொரோனா பரவிவிடும் என்று காரணம் கூறுவார்கள். தற்போது மட்டும் என்ன, வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவாமலா இருக்கிறது. அப்படி ரயில்கள், சாலைகள் மூலமாக வந்தவர்களில் பலருக்கு தற்போது கொரோனா வந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அப்போதே அனுமதி வழங்கி இருக்கலாம், வெளிமாநில தொழிலாளிகள் குறித்து சரியான புள்ளி விபரங்களை எந்த அரசும் பின்பற்றுவதில்லை. இதுவும் ஒரு பெரிய சிக்கலாக உள்ளது. அதிகமானோர் சென்னை, மும்பை, டெல்லி  போன்ற பெரிய நகரங்களுக்கு சென்று வேலை செய்து வந்தனர்.  தற்போது இதுபோன்ற இடங்களுக்கு சென்றவர்கள் தான் கொரோனாவால் அதிகம் கஷ்டமடைந்துள்ளனர்.


Tags : Researcher ,Foreign Workers ,S. Iridayarajan , Curfew, government indifference, esirutayarajan, Professor, migrant workers, researcher
× RELATED வீட்டில் தாயுடன் தூங்கிக்...