சீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம்

ஹாங்காங்: சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக ஹாங்காங்கில் நடந்த போராட்டத்தை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர். சீனாவின் கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட பகுதி ஹாங்காங். இங்கு சீனாவின் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வந்தது. கொரோனாவால் நடுவில் இந்த போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் போராட்டம் தொடங்கிது. ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு சீனாவுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை கலைத்தனர். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய டாம் சாக்-சி என்பவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஊரடங்கு காரணமாக 8 பேருக்கு மேல் ஒன்று கூட அனுமதி கிடையாது’’ என்றனர்.

Related Stories: