3 முறை தரையிறங்க முயற்சி பாக். விமான விபத்து; விமானி மீது சந்தேகம்

கராச்சி: பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி சென்ற பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளாகி 91 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி விமான போக்குவரத்து இயக்குநரகத்தின்  முதற்கட்ட விசாரணை அறிக்கை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ள தாவது:,விமானி முதல் முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போது, 3 முறை இன்ஜின்  தரையுடன் உரசி தீப்பொறி பறந்துள்ளது. நான்காவது முறையாக முயற்சிக்கும் போதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது. இன்ஜின் தரையில் உரசியதால் அதன் எரிபொருள் டேங்க் மற்றும் பம்ப்பில் சேதம் ஏற்பட்டு செயல் இழந்துள்ளது.

Advertising
Advertising

லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமானியால் விமானத்தை சரியாக தரையிறக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் அதைப் பற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கு எதையும் கூறவில்லை. கடைசி கட்டத்தில்தான் விமான இன்ஜின் செயலிழந்து விட்டது என கூறியிருக்கிறார். அடுத்த சில நொடிகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, தொழில்நுட்ப கோளாறுதான் விபத்துக்கு காரணமா அல்லது விமானியின் தவறா என தீவிர விசாரணை நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணைஅறிக்கை வெளியிட 3 மாதங்களாகும் என கூறப்படுகிறது.

Related Stories: