கொள்ளை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்

பெரம்பூர்:  வியாசர்பாடி நியூ மெகிசின்புரம் பகுதியை சேர்ந்த செல்வம் (43) என்பவர், தனது வீட்டின் கீழ் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது கடை பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்த வழக்கில், வடபழனியை சேர்ந்த பிரபா (21), கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (20), சாய் கிருஷ்ணன் (21) ஆகிய மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மாணவன் கைது:  எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஆசைதம்பி (32) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 3 சவரன் நகை, ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்த அதே பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் குருநாதன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: