ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து 2ம் கட்டமாக 100 பேர் சென்னை திரும்பினர்

மீனம்பாக்கம்: இந்தியாவில் இருந்து வேலைக்காக ஏஜென்ட்கள் மூலம் போலி பாஸ்போர்ட்டில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்ற ஏராளமான இந்தியர்களை அந்த நாட்டு அரசு காவலில் வைத்திருந்தது. இந்திய தூதரகம் மூலம் இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, முதற்கட்டமாக கடந்த வாரம் 178 பேர் துபாயிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்தனர். இவர்கள் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  இந்நிலையில், 2ம் கட்டமாக 4 பெண்கள் உட்பட 100 இந்தியர்கள் தனி விமானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தனர். பரிசோதனைக்கு பிறகு இவர்கள் அனைவரும் ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories: