சமூக இடைவெளி இல்லாமல் காய்கறி விற்ற 16 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.60 லட்சம் அபராதம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் காய்கறிகளை வாங்கி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்த வியாபாரிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி பலர் தற்போது சரக்கு ஆட்டோக்களில் காய்கறிகளை வாங்கி வந்து தெருத் தெருவாக விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள சின்மயா நகர், காளியம்மாள் கோயில் தெரு, நெற்குன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு அம்மா உணவகம் அருகில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சிலர் சரக்கு வாகனங்களில், சமூக இடைவேளி இல்லாமல் காய்கறிகள் விற்பனை செய்வதாக கோயம்பேடு போலீசாருக்கு புகார் வந்தது.

 அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சமூக இடைவெளி இல்லாமல் காய்கறி விற்பனை செய்த 16 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். பின்னர், கொரோனா வைரஸ் பரப்பும் வகையில் செயல்பட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஒரு வாகனத்துக்கு 10,000 வீதம் 1.60  லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: