கோயில்களுக்கு இ-சேவை வழியாக 5.53 லட்சம் பக்தர்கள் நன்கொடை

சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி பக்தர்கள் கோயில்ளுக்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து கோயில்களிலும் அனைத்து கால பூஜைகளும் நடந்து வருகிறது. இதனால் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு முக்கிய கோயில்களின் நிகழ்வுகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல கோயில்களின் முக்கிய வருவாய் உண்டியல் மூலம் கிடைக்கிறது.  இந்நிலையில் பக்தர்கள் வருவது தடைப்பட்டுள்ளதால் அவர்களின் வசதிக்காக இ-உண்டியல் வசதியை அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி பக்தர்கள் சிலர் அறநிலையத்துறை இணையதளம் வாயிலாக கோயில்களில் பூஜைகள், அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

குறிப்பாக, அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், சின்ன காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி 6 கோயில்களில் இ-சேவை மூலம் இ-நன்கொடை, இ-அன்னதானம், இ-பூஜை காணிக்கையாக பெறப்படுகிறது.  கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நேற்று வரை இ-பூஜா 2,76,948ம், இ -அன்னதானம் 88,630, இ-நன்கொடை 1,88,318 ஆக நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

Related Stories: