ரேஷன் கடைகளில் 500 மளிகை தொகுப்பு வாங்க ஆள் இல்லை

* தரம், விலை உயர்வால் மக்கள் புறக்கணிப்பு

* ஊழியர்கள் புலம்பல்

சென்னை: சந்தை விலையைவிட அதிகம் மற்றும் தரம் குறைவாக உள்ளதால் அரசு அறிவித்த 500 மதிப்புள்ள மளிகை ெதாகுப்பை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: ரேஷன் கடை ஊழியர்கள் படும் துன்பங்கள் சொல்லிமாளாது. 500 மதிப்புள்ள மளிகை பொருள்கள் விநியோகம் செய்ய சில மாவட்டங்களுக்கு மட்டும் பொருட்கள் வந்துள்ளன. அதுவும் சந்தை விலையை விட குறைவாக உள்ளதா? தரம் உயர்வாக உள்ளதா? என்றால் இல்லை.

டீத்தூள் சந்தையில் 29 விலை. ஆனால் அரசு 24 ரூபாய்க்கு தருகிறோம் என்று விளம்பரம் செய்துவிட்டு, 19க்கு சந்தை விலையில் உள்ள ஊட்டி தேயிலையை நியாய விலை கடைகளுக்கு அனுப்பியுள்ளது. சன் பிளவர் ஆயில், 200 கிராமுக்கு பதில், இரண்டு 100 கிராம் ஆயில் வழங்க சொல்கிறார்கள். இதுபோல பல பொருட்கள் வெளி சந்தையைவிட அதிக விலை உள்ளது. மக்கள் மிகவும் பொருளாதாரத்தில் சிரமப்படும் இந்த சூழ்நிலையில், 500 ரூபாய் கொடுத்து இந்த பொருட்களை வாங்க மாட்டார்கள். இந்த பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் அதுவும் எங்கள் தலையிலேயே விழும். ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் எத்தனை பணிகளை செய்ய முடியும் என்றனர்.

Related Stories: