×

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் உள்ள ஏரிகள் புனரமைப்பு பட்டியல் வெளியீடு: மாவட்ட வாரியாக இணையத்தில் பார்க்கலாம்

சென்னை: தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரிகள் எங்கெங்கு புனரமைக்கப்படுகிறது என்கிற விவரங்கள் அடங்கிய மாவட்ட வாரியான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் கடந்த 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் 1387 ஏரிகளை புனரமைக்க ₹499.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் ஏரி புனரமைப்பு பணி தொடங்கப்பட்டு வருகிறது.

ஆனால், மாநிலம் முழுவதும் எந்தெந்த ஏரிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது தொடர்பான விவரங்கள் எம்எல்ஏக்களுக்கு தெரிவதில்லை என்றும், எனவே, ஏரிகளின் விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதன்பேரில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் எந்தெந்த ஏரிகள் புனரமைக்கப்படுகிறது என்பது தொடர்பாக மாவட்ட வாரியாக பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் மூலம் 6,73,050.031 எக்டேர் பயன்பெறுகிறது.

இந்த பட்டியலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புனரமைக்கப்படும் ஏரிகளின் பெயர், ஒவ்வொரு ஏரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி, அந்த ஏரிகள் மூலம் பயன்பெறும் பாசன பரப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது ஏரிகள் புனரமைப்பு பணி நடந்து வரும் நிலையில் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவட்டம்    நிதி
ஒதுக்கீடு    ஏரிகள்
எண்ணிக்கை
அரியலூர்    52 லட்சம்    4
செங்கல்பட்டு    15 கோடி    37
காஞ்சிபுரம்    17 கோடி    32
திருவள்ளூர்    32 கோடி    80
கோவை    7 கோடி    43
கடலூர்    9 கோடி    45
தர்மபுரி    3.9 கோடி    9
திண்டுக்கல்    5.5 கோடி    11
ஈரோடு    19  கோடி    57
கரூர்    2.43 கோடி    10
கிருஷ்ணகிரி    6.1கோடி    11
மதுரை    31 கோடி    56
நாகை    35 கோடி    131
நாமக்கல்    8.4 கோடி    19
பெரம்பலூர்    3.58 கோடி    14
புதுக்கோட்டை    21 கோடி    43
ராமநாதபுரம்    38 கோடி    61
ராணிப்பேட்டை    9.1 கோடி    24
திருப்பத்தூர்    1.49 கோடி    4
வேலூர்    4.68 கோடி    14
சேலம்    9.23 கோடி    28
சிவகங்கை    26.5 கோடி    35
தென்காசி    10 கோடி    35
நெல்லை    16 கோடி    46
தூத்துக்குடி    6.9 கோடி    17
தேனி    5.4 கோடி    10
தஞ்சாவூர்    35 கோடி    109
திருவாரூர்    20 கோடி    88
திருப்பூர்    13 கோடி    132
திருவண்ணாமலை    31 கோடி    59
திருச்சி                      5.9 கோடி    20
விழுப்புரம்    12 கோடி    38
கள்ளக்குறிச்சி    11 கோடி    23
விருதுநகர்    17 கோடி    42

Tags : Tamilnadu Citizenship Project Launch ,District , Tamilnadu, Citizenship Program, Lakes, District wise Internet
× RELATED வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை வேலை இணையம் தொடக்கம்