×

தையூர், காயார் ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவி: தா.மோ. அன்பரசன் வழங்கினார்

திருப்போரூர்:  திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தையூர் பாலமா நகர், கோமான் நகர் மற்றும் காயார் ஊராட்சி பகுதியில் நலிந்தோருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கௌரிசங்கர் வரவேற்றார். காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன் அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறி ஆகிய கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், ஒன்றிய பொறுப்புக்குழு நிர்வாகிகள் கெஜராஜன், அருள்தாஸ், வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 6 முதல் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டதாக வேளாண் துறை அறிவித்துள்ள நிலையில், 6 முதல் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அப்படியானால் நெல் சாகுபடையைவிட நெல் கொள்முதல் அதிகமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன், செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 36 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யாமல் காத்து கிடக்கிறது. இதனை பயன்படுத்தி வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து 80 கிலோ மூட்டையை 1070 முதல் 1100 வரை வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர்.

இதில் இருந்தும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் லாபம் பார்ப்பதாகவும் விவசாயிகள் குற்றம் காட்டுகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் விவசாயிகள் விளைபொருள்களை விற்க எந்த தங்குதடையும் இல்லை என அரசு அறிவித்தாலும், முழுக்க முழுக்க விவசாயிகளை ஏமாற்றும் போக்கே தொடர்கிறது. எனவே, இனியாவது விளைவித்த நெல்லுக்கு விலையில்லாமல் வெந்து கிடக்கும் விவசாயிகளின் நிலைகருதி மாவட்ட நிர்வாகம்,  முறையாக ஆய்வு செய்து, விவசாயிகள் ஏமாற்றப்படாமல் தடுப்பதுடன், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Anbarasan ,Thayer ,Kayar Panchayat , Thayur, Kayar Panchayat, Corona, TM. Anbarasan
× RELATED கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாளை...