×

எலிகளிடம் வெற்றி; அடுத்து குரங்குகள் மருந்து கண்டுபிடிப்பில் முந்துகிறது தாய்லாந்து

பாங்காங்: தாய்லாந்தில் கோவிட்- 19 வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அதனை குரங்குகளுக்கு செலுத்தி சோதனையை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி வருகின்றது. இதனால் ஏற்படும் உயிர் பலிகளும் அதிகரி–்த்து வருகின்றது. கொரோனாவுக்கு எதிராக எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள மருந்துகளின் கூட்டு கலவையை பயன்படுத்தியே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவிட் 19 வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள் ஒன்றிணைந்தும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரவமாக ஈடுபட்டுள்ளன. இ்ந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தாய்லாந்து இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் புதனன்று கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து அறிவித்தது. அடுத்த ஆண்டு முதல் மருந்து உற்பத்தி செய்யப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

இது தொடர்பாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் சுவித் மேசின்சி நேற்று முன்தினம் கூறுகையில், “ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான மருந்தை கண்டுபிடித்துள்ளனர். எலிகளின் உடலில் செலுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து குரங்குகளுக்கு மருந்தை செலுத்தி நடத்தும் சோதனை தொடங்கியுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் செப்டம்பரில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கிடைத்துவிடும்,” என்றார்.

Tags : Thailand ,Success ,drug discovery , Thailand, Covid- 19, Coronavirus
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...