சிங்கக்குட்டி போல வேடமிட்ட குழந்தை... கொஞ்சி விளையாடிய சிங்கம்!

உயிரியல் பூங்கா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது  இணையதளத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 3.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 11 மாத குழந்தைக்கு சிங்கக்குட்டி போல ப்ரவுன் நிறந்தில் உடை அணிவித்து பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த குழந்தை கண்ணாடி வழியாக அந்த பக்கம் இருந்த சிங்கத்தை பார்த்து முதலில் துள்ளி குதித்து விளையாடியுள்ளது.

Advertising
Advertising

உடனே அந்த சிங்கமும் குழந்தையிடம் ஜாலியாக கைகளை கண்ணாடியில் தட்டி உற்சாகமாக விளையாடியது. இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. அந்த சிங்கம் இந்த குழந்தையை சிங்கக்குட்டி உடையில் பார்த்ததும் உண்மையில் அப்படியே நினைத்துவிட்டது போல என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories: