×

10 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட நகையை கண்டு பிடித்த 6 வயது சிறுவன்...

அமெரிக்காவின் தெற்கு கரோலினா ஏரி பகுதியில் நீருக்கடியில் ஏதேனும் உலோக பொருட்கள் தென்படுகிறதா என விளையாட்டாக  காந்தத்தை வைத்து 6 வயது சிறுவன் தேடிக்கொண்டிருந்தான். திடீரென காந்த தூண்டிலில் கடினமான பொருள் சிக்கியது. அதை இழுக்கமுடியாமல் போராடிக்கொண்டிருந்தான், உடனே சிறுவனின் பெற்றோர் உதவினர். பின்னர் நீரிலிருந்து மேலே எடுத்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. அது ஒரு  பூட்டப்பட்டு இரும்பு பெட்டி.. உடனே அச்சிறுவனின் குடும்பத்தினர்  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் அப்பெட்டியை சோதனை செய்ததில் அதில் விலையுயர்ந்த தங்க நகைகள் இருந்தது, இது ஒரு பெண்ணின் வீட்டில் 10 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட நகைகள் எனவும் கண்டறிந்தனர். பின்னர் அந்த நகைகளை அப்பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்தனர். அச்சிறுவனை அந்த பெண் குடும்பத்தினர் அரவணைத்து கண்ணீருடன் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Tags : Jewel, boy
× RELATED மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி