மாநிலங்களின் தனித்தனி விதிமுறையால் குழப்பத்தில் உள்நாட்டு விமான சேவை; மேற்கு வங்கத்தில் நாளை விமான சேவை தொடங்காது என அறிவிப்பு

டெல்லி : இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து நாழு தழுவிய பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவசரத் தேவைக்கு மட்டும் விமானங்கள் இயங்கி வந்தன. 3-வது ஊரடங்கு மே 17-ந்தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் நாளையில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் பின்பற்றக் கூடிய பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன.

கோவா போன்ற அரசுகள் விமான நிலையத்தை தயார்படுத்தியுள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் தற்போதைக்கு விமான சேவையை விரும்பவில்லை. மேலும் பல மாநிலங்கள் அவர்களாகவே பல வழிகாட்டு நடைமுறைகளை அறிவித்துள்ளன. மேற்கு வங்காளத்தில் கடந்த 20-ந்தேதி அம்பன் புயல் மிகப்பெரிய சேதத்தை உருவாக்கின. அவற்றை சீர்செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் மே 28-ந்தேதியில் இருந்து இயக்க வேண்டும் என கொல்கத்தா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மகாராஷ்டிரா அரசு 25 விமானங்கள் தரையிறங்கவும், 25 விமானங்கள் புறப்படவும் அனுமதி வழங்குவோம்.

இது படிப்படியாக உயர்த்தப்படும். அதற்கான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக அரசும் விமான சேவைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. கர்நாடக அரசு தனிமைப்படுத்துதல் குறித்து வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனால் விமான சேவை தொடங்கினாலும் பயணிகள் பல குழப்பத்திற்கு இடையில்தான் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல் விமானம் மும்பையில் இருந்து பாட்னாவுக்கு காலை 4.20 மணிக்கு புறப்படுகிறது. அதேபோல் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு 4.30 மணிக்கு ஒரு விமானம் புறப்படுகிறது. இந்த இரண்டு சேவையையும் இண்டிகோ ஏர்லைன் தொடங்குகிறது. ஒருவேளை கொல்கத்தா அரசு விமானம் தரையிறங்க அனுமதி அளிக்காவிடில், மாற்று ஏற்பாடு குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை.

மேற்கு வங்கத்தில் நாளை இல்லை

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 28-ம் தேதி முதல் விமான சேவையை அனுமதிக்கலாம் என மேற்கு வங்க அரசு கூறிய ஆலோசனையை ஏற்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories: