வெண்டிலேட்டர் வாங்க இந்த பணம் போதும்! சிறுமிகளின் கண்ணீர் கடிதம்!

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு சிறுமிகள் மயோ க்ளினிக் என்ற மருத்துவமனைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், “மயோ க்ளினிக்கில் பணிபுரிபவர்களே… கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் சிறு தொகையை நன்கொடையாக அளிக்கிறோம். அதை வைத்து உங்கள் மருத்துவமனையில் புதிய வெண்டிலேட்டர்கள் மற்றும் படுக்கைகள் வாங்கிக்கொள்ளுங்கள்.

இந்த தொகை அதற்கு போதுமான அளவு இருக்கும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த கடிதத்தை மயோ க்ளினிக்கில் பணியாற்றும் ர்யான் ஸ்டீவ்ஸ் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகியுள்ளது. மேலும், அந்த குழந்தைகளை பலரும் பாராட்டிவருகின்றனர்.

Related Stories: