×

வேதாரண்யத்தில் அலைகள் சீற்றம்; 60 ஏக்கர் உப்பளத்தில் கடல் நீர் புகுந்தது: உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் அலைகளின் சீற்றத்தால், 60 ஏக்கர் உப்பளத்தில் கடல்நீர் உட்புகுந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது. காற்றுடன் மணல் கலந்து வீசுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.  

கோடியக்கரை கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக உள்ளது. இதனால் அங்குள்ள 60 ஏக்கர் உப்பளங்களில் கடல் நீர் உட்புகுந்தது. இதேபோல் அகஸ்தியன்பள்ளியில் 100 அடி வாய்க்காலிலும், ஒரு சில உப்பள பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பள பகுதிக்குள் புகுந்த கடல் நீரை வடிய வைக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல் நீர் புகுந்த உப்பள பகுதிகளில் தண்ணீரை வடிய வைத்து உப்பு உற்பத்தி துவங்க இன்னும் ஒருசிலநாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Heterogeneity, salinity and production impact
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...