கொரோனா பாதிப்பை உயர்த்தி வரும் சென்னை மாநகரம்: கொரோனா தனிவார்டாக மாறும் நேரு விளையாட்டு அரங்கம்...

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேரு உள்விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்படவுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் சுமார் 759 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கொரோனா பாதிப்பு பதிவானது நேற்றுதான் முதல்முறையாகும். சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 9,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்கும் வகையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்படவுள்ளது.

கொரோனாவுக்கு எதிராகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தபோதிலும் வைரஸ் பரவலின் வேகம் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே  உள்ளது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் மிக அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.

Related Stories: