புதுச்சேரியில் நாளை டாஸ்மாக் திறக்கப்படுகிறதா?: கொரோனா வரியுடன் மதுபானம் விற்பனை செய்ய ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்...!

புதுச்சேரி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

இதற்கிடையே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதில், மாநிலத்தில் மதுக்கடைகள் 19-ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி தெரிவித்துள்ளார். மது விற்பனைக்கு மட்டுமே அனுமதி; அமர்ந்து சாப்பிட  அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி,. மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடரவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

ஆனால், கொரோனா வரி விதிக்காததால் மதுபானங்களை திறக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில்,

புதுச்சேரி, காரைக்காலில் மதுபானம் விற்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா வரியுடன் மதுபானம் விற்பனைக்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார். மதுபானக் கடைகளை திறப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று அறிவிக்க உள்ளார். மேலும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கவும் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: