கால்பந்து பயிற்சியாளர் சண்முகம் காலமானார்

சென்னை: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான சண்முகம் நேற்று காலமானார். சென்னை வியாசர்பாடி, பி.வி. காலனியில் வசித்து வந்த ஆர்.சண்முகம்( 77). ஐசிஎப்-ல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது குடும்பம் பர்மாவில் இருந்தபோது கால்பந்து விளையாடத் தொடங்கி, அந்நாட்டின் தேசிய அணிக்காக களமிறங்கி உள்ளார். அறுபதுகளில் சென்னை திரும்பியதை தொடர்ந்து கொல்கத்தாவின் பிரபலமான மோகன் பகான் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடியுள்ளார்விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஐசிஎப்-ல் பணிக்கு சேர்ந்தார். தமிழ்நாடு, இந்தியா ஏ, ஐசிஎப் உட்பட பல்வேறு கால்பந்து அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

Advertising
Advertising

தொடர்ந்து இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக 90களில் பணியாற்றினார். குறிப்பாக ஜவகர்லால் நேரு நினைவு கோப்பை போட்டி நடைபெற்றபோது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.  சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற  தமிழ்நாடு அணிக்கான பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இதுதவிர இந்தியன் ரயில்வே, ஐசிஎப் அணிகளுக்கும் பயிற்சி அளித்ததுடன், ஆலோசகராகவும் இருந்துள்ளார். உடல் நலக்குறைவுக் காரணமாக நேற்று காலை காலமானார். அவரது உடலுக்கு ஐசிஎப் கால்பந்து பயிற்சியாளர் துளசி,  கால்பந்து வீரர்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை ஹாக்கி சங்க தலைவர் ஒலிம்பியன் பாஸ்கரன், பொதுச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: