×

பாக். விமான விபத்து பலி 97 ஆக உயர்வு: 2 பேர் படுகாயங்களுடன் மீட்பு

காராச்சி:  பாகிஸ்தானில் விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 97 பேர் ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2 பேர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.  பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து பிகே-8303 என்ற விமானம் நேற்று முன்தினம் கராச்சி புறப்பட்டு சென்றது. இதில், 91 பயணிகளும், 8 ஊழியர்களும் இருந்தனர். ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க தயாரான போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மீண்டும் 2வது முறையும் விமானி விமானத்தை தரையிறக்க முயற்சித்தார். ஆனால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 45 பேரின் சடலங்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வந்தன. அதில், 50ிக்கும் ேமற்பட்டோரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. இதனால், விமான விபத்தில் 97 பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக அதன் இறக்கைகள் வீடுகளின் மீது பயங்கரமாக மோதின. இதில், 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த வீடுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



Tags : Pak ,Air Crash ,plane crash ,recovery ,persons , Pakistan, plane crash
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி