×

உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக நியமனம்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

சென்னை: உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடின உழைப்பு, திறமை மூலம் இவ்வளவு பெரிய உயர்ந்த பதவியை அடைந்திருப்பது, இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும். நீண்டகாலம் நீங்கள் ஆற்றிய தொழிலுக்கு தற்போது மிக சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் உங்களை பாராட்டுவதோடு, உங்கள் பணி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.

 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி: உலகம் முழுவதும் கோவிட்-19 பிரச்னையில் தத்தளிக்கும் இந்த நேரத்தில், தங்களுக்கு உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பு உங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்றாலும், சிறந்த அனுபவங்களும், மனிதநேய கொள்கைகளும் உள்ள தங்களால் இந்த பதவியில் மிக சிறந்த முறையில் பணியாற்ற முடியும். உலக சுகாதார அமைப்பின் கோட்பாடுகளை நிறைவேற்ற நீங்கள் மேற்கொள்ள கூடிய முயற்சிகளும், சேவைகளும் இந்தியாவிற்கு வரும் நாட்களில் பெருமை தேடி தரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : World Health Organization ,Harsha Vardhan ,Deputy Chairman , World Health Organization, Executive Committee Chairman, Union Minister Harshvardhan, Chief Minister, Deputy Chief Minister
× RELATED ‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார...