×

கட்டுமான பொருள் விலையேற்றத்தைதடுக்க கோரிக்கை

சென்னை: அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில தலைவர் பிரகாஷ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசு பணிகளில் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள பதிவு மற்றும் பணி நிறைவுக்கான கால அவகாசத்தினை தமிழக அரசு வரும் 31.03.2021 வரை நீட்டிக்க வேண்டும்.சிமென்ட் விலை மூட்டைக்கு 80 முதல் 100 வரையும், இரும்பு கம்பியின் விலை டன்னுக்கு 6000 முதல் 8000 வரையும் ஜல்லி, எம்-சான்ட் மற்றும் இதர கட்டுமான பொருட்களின் விலை குறைந்தபட்சம் 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிமாநில புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பி சென்றுவிட்டதால் இருக்கும் குறைந்தபட்ச தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்துவிட்டது. அதனால் கட்டுமான பொருட்களின் செயற்கையான விலையேற்றத்தை உடனடியாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : All India Builders Association, State President Prakash, Chief Minister Edappadi Palanisamy
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...