தமிழகத்தில் திங்கள் கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும்; நாளை நோன்பு இருக்க வேண்டும்: தலைமை ஹாஜி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரமலான் கொண்டாடப்படும் என கூறினார். உலகம் முழுக்க ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். கடந்த மாதம் தொடங்கிய நோன்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதில் சூரிய உதிப்பதற்கு முன் சாப்பிட வேண்டும், அதன்பின் நோன்பு இருக்க வேண்டும், மீண்டும் சூரியன் மறைந்த பின்தான் நோன்பை துறக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.

இந்தியா முழுக்க இஸ்லாமியர்கள் இதை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையில் ரமலான் பண்டிகை குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு காஜி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரமலான் பெருநாள் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

இதனால் மே 25ல் ரம்ஜான் கொண்டாடப்படும். தமிழகத்தில் இஸ்லாமியர்கள் கண்டிப்பாக நாளை நோன்பு நோற்க வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். பொதுவாக ரம்ஜான் பிறை தெரிந்த மறுநாள்தான் கொண்டாடப்படும். இன்று பிறை தெரியவில்லை. அமாவாசை முடியும் என்பதால் நாளை பிறை தெரியும். இதனால் நாளை மறுநாள் தமிழகத்தில் ரம்ஜான் கொண்டாடப்படும். ஆனால் சில மத்திய கிழக்கு நாடுகளில் இன்று பிறை தெரிந்த காரணத்தால் நாளையே ரம்ஜான் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: