தடுப்புகளை உடைத்தெறிந்து அட்டூழியம்; மார்த்தாண்டம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்: பொதுமக்கள் கடும் அவதி

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் லாரிகள் உட்பட வாகனங்களை பலரும் நிறுத்தி வந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். வர்த்தக நிறுவனமும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

Advertising
Advertising

இந்த நிலையில் சாலையோரம் கூம்பு வடிவ  ஒளிரும் பிளாஸ்டிக் தூண்கள் வைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவிப்பும் வைக்கப்பட்டது. ஆனாலும் இதை மதிக்காமல் அந்த தூண்களை உடைத்தும், தட்டிவிட்டும் மீண்டும் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சாலையோரம் வாகனம் நிறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: