×

போதையில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ‘குடிமகன்’... சின்னமனூரில் பரபரப்பு

சின்னமனூர்: சின்னமனூரில் மதுபோதையில் மின் கம்பத்தில் ஏறிய ‘குடிமகன்’ தற்கொலைக்கு முயன்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புத்தம்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (30). கூலி தொழிலாளி. மது போதைக்கு அடிமையான இவர், அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று வழக்கம் மதுபோதையில் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஓடைப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் முத்துப்பாண்டியை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போலீசார், பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, தற்கொலை செய்து கொள்ள போவதாக, காவல்நிலையம் அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறினார். இதனால் அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சமாதானம் பேசி முத்துப்பாண்டியை கீழே இறங்க செய்தனர். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் மின் கம்பத்தில் ஏறியவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Citizen , Drug, Power, Suicide, Citizen, Chinnamanur
× RELATED ஜெயிலு... பெயிலு... குடிமகனின் ரகளை