×

கிளி வளர்க்க ஆசையா?.. அபராதம் ரெடியா வச்சுக்கோங்க: கடையத்தில் 6 பேருக்கு ரூ.65 ஆயிரம் போட்டாச்சு

கடையம்: கடையம் பகுதிகளில் கிளிகளை பிடித்து வளர்த்து வந்த 6 பேருக்கு 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடையம் பகுதிகளில் பனைமரங்களில் இருந்து கிளிகளை பிடித்து வந்து வளர்ப்பதாகவும், சிலர் கிளியை விற்பனை செய்வதாகவும் கிடைத்த தகவலரின் பேரில் கடையம் வனச்சரகர் நெல்லைநாயகம் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் ஆவுடையானூரைச் சேர்ந்த முருகன் மகன் வைகுண்டமணி, கொடிமணி மகன் டேவிட், பரமசிவன் மகன் சரவணன், கொண்டபையன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசக்திவேல் மகன் துரைராஜ், கணபதி மகன் பாலகன், செங்கோட்டையைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் சுப்பிரமணியன் ஆகியோர் கிளிகளை பிடித்து வளர்த்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனர் கணேசன் (பொறுப்பு) உத்தரவின் பேரில் 6 பேருக்கும் ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த கிளிகள் கூண்டுடன் பறிமுதல் செய்யப்பட்டது.Tags : Parrot, fine, stall
× RELATED கிளிகளை பேச வைத்து ‘டிக் டாக்’ பள்ளி...