இந்தியாவில் 50,000 பேருக்கு வேலை கொடுப்பதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு!!

டெல்லி : இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலை கொடுப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக உலக முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. உலகின் பல முன்னணி நிறுவனங்களும் பொருளாதாரச் சிக்கலில் தவிக்கின்றன.

Advertising
Advertising

இந்நிலையில், ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியா, 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறது. ஏற்கெனவே 1 லட்சம் ஊழியர்களை பணிக்கு அமர்த்திய அமேசான் நிறுவனம் மீண்டும் ஆட்களைச் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்துப் பேட்டியளித்துள்ள அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் அகில் சக்சேனா, இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கடினமான நேரத்தில் உதவ விரும்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் தனிமனித இடைவெளியை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். எனவே, அவர்களுக்கு முழுமையான சேவையை வழங்க 50 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம். இது இந்தியா முழுமைக்கானது. அப்போதுதான் எங்களது வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: