×

பிரேசிலில் கொரோனாவுக்கு மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் : உடல்களை அடக்கம் செய்ய பிரமாண்ட கல்லறை உருவாக்கம்!!

பிரேசில் : பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான சாவோ பவுலோவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் வகையில் பிரமாண்டமான கல்லறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,001 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,30,890 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு 21,116 பேர் பலியாகி உள்ளனர்.

சாவோ பவுலோ நகரில் 63ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.5ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தெற்கு பகுதியில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் தற்போது காணப்படும் கொரோனா பாதிப்புகள் மேலும் மோசமடையும் என்ற கவலை அங்கு எழுந்துள்ளது.இதற்கிடையில் சாவோ பவுலோ உருவாக்கப்பட்ட பிரமாண்ட கல்லறையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மின்னல் வேகத்தில் உறவினர்களால் அடக்கம் செய்யப்படுகின்றன. இதற்கு காரணம் கொரோனாவால் உயிரிழந்த மற்றொருவரின் உடல் அடக்கம் செய்ய தயாராக அங்கு இருக்கிறது.

Tags : Coronal Lightning ,Brazil ,Coronal Lightning for Increasing Casualties: Massive Grave Formation , Brazil, corona, casualties, burial, colossal, grave, creation
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி