×

கேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் : விஞ்ஞானிகள் ஆய்வு

திருவானந்தபுரம் : கேரளாவில் கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுகின்றன.இது குறித்த ஆய்வை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒத்துக்குங்கல் நகரைச் சேர்ந்த ஏ.கே.ஷிஹாபுதீனின் சிறிய கோழி பண்ணையில் ஆறு கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளிட்டு வருகின்றன. சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, ஷிஹாபுதீன் தனது கோழிப்பண்ணையில் ஓரு கோழி போட்ட முட்டையில் பச்சை மஞ்சள் கரு இருப்பதைக் கண்டறிந்தார். அது பாதுகாப்பானதா என சந்தேகம் எழுந்ததால்  அவரோ அவரது குடும்பத்தினரோ அதை உட்கொண்டதில்லை.

அதற்கு பதிலாக, கோழியால் போடப்பட்ட சில முட்டைகளில் குஞ்சிகள் பொறித்தார்.சுவாரஸ்யமாக, அதில் இருந்து உருவாகிய புதிய கோழிகளும் பச்சை முட்டையிட ஆரம்பித்தன. இந்நிலையில் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இந்த நிகழ்வு குறித்த ஆய்வு நடத்தி வருகின்றனர். சில சிறப்பு தீவனங்களை கோழிகள் சாப்பிடும் போது பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த கோழிகளுக்கு எந்த சிறப்பு உணவையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : scientists ,Kerala , Kerala, greenhouses, eggs, chickens, scientists, study
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...