×

திருவண்ணாமலையில் மதுவிலக்கு போலீசார் அதிரடி.: 700லி. சாராயம், 1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு போலீசார் கள்ளச்சாராயம் விற்ற 11 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை தலைதூக்கியது. மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் மீண்டும் தொழிலை தொடங்கிய கள்ளச்சாராய வியாபாரிகள் விற்பனையை தொடர்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சோதனை நடத்திய மதுவிலக்கு போலீசார் 1400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். மேலும் செய்யாறு அருகே வெங்கட்ராயன் பேட்டையில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து இருந்த சதிஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மல்லவாடி, வண்ணக்குளம் உள்ளிட்ட ஊர்களில் மேற்கொண்ட சோதனையில் 700லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை தரையில் ஊற்றி அழித்தனர். சாராயத்தை பதுக்கிவைத்து இருந்த 11 பேரை கைது செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Thiruvannamalai Alcohol , Liquor, police ,Thiruvannamalai, Alcohol,
× RELATED பெரியபாளையம் மதுவிலக்கு காவல்...