உதகையில் பூத்து குலுங்கும் டெல்பீனியம் மலர்கள்.: பல்லாயிரக்கணக்கான மலர்களை பார்க்க ஆள் இல்லை

உதகை: உதகை அரசு தவிரவியல் பூங்காவில் கண்களுக்கு விருந்தளிக்கும் டெல்பீனியம் மலர்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளன.  உதகை அரசு தவிரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இதில் யூரேஷியாவை சேர்ந்த டெல்பீனியம் என்னும் மலர்கள் தற்போது பூக்க தொடங்கியுள்ளது. சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த செடியில் 15 வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகிறது.

மருத்துவ குணம் கொண்ட டெல்பீனியம் மலர்கள் ஐரோப்பாவில் அதிகம் வளர்க்கப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் இந்த மலரை காணும் வாய்ப்பை இழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் உதகையில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் மலர் கண்காட்சி தடை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>