×

குழப்பத்தில் வாகன ஓட்டிகள்: கடந்த 20 நாட்களாக மாற்றமின்றி ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை...!

சென்னை: சென்னையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. அதனால், கச்சா எண்ணெய்யின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதற்கிடையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி கடந்த மே 3-ம் தேதி உயர்த்தப்பட்டது. பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்ந்தது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 20 நாட்களாக மாற்றமின்றி, ஒரே விலையில் தொடர்கிறது. இதன்படி, பெட்ரோல் 75.54 ரூபாயாகவும், டீசல் 68.22 ரூபாயாகவும் உள்ளது. இதே விலையில் கடந்த 20 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Motorists , Motorists in chaos: For the past 20 days, the same price has been unchanged.
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு