அம்மா உணவக ஊழியர் மீது தாக்குதல்

ஆலந்தூர்: பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜீவிதா (30). மடிப்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த உணவக பொறுப்பாளர் அனிதா என்பவருக்கும், ஜீவிதாவுக்கும் இடையே வேலை சம்பந்தமாக  தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், பெருங்குடி மண்டல சுகாதார பிரிவில் பணிபுரியும் சங்கர் என்பவர் அனிதாவிற்கு ஆதரவாக ஜீவிதாவிடம் தகராறு செய்ததுடன், சக ஊழியர்கள் முன்னிலையில் அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த ஜீவிதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சங்கர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>