ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகே கொள்ளையன் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (26), பிரபல கொள்ளையன். இவர் மீது பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் தேவா என்பவரின்  தம்பி அஜித்குமாரை  சிலர் செம்மஞ்சேரியில் ஏரியில் தள்ளிவிட்டதில் நீச்சல் தெரியாமல் இறந்தார். அப்போது கொள்ளையன் ரமேஷ் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் தான் தனது சகோதரனை தண்ணீரில் தள்ளி கொலை செய்து இருக்க கூடும் என்று தேவா சந்தேகமடைந்தார்.இதனால், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, தேவா தனது நண்பர்கள் 7 பேருடன் கொள்ளையன் ரமேஷை நெற்குன்றத்தில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் குடியிருப்பு அருகே நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்று,  மது அருந்தியுள்ளார்.

Advertising
Advertising

போதை தைலைக்கேறியதும், நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். தகவலறிந்த விரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார், 3  பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தேவா உள்ளிட்ட  5 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: