கால் டாக்சிகள் இயக்குவதற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

ஆலந்தூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கால் டாக்சி, ஆட்டோ போன்றவற்றை இயக்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்த தொழிலை நம்பி வாழும் டிரைவர்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட டிரைவர்கள் நேற்று தமிழ்நாடு கால் டாக்சி தொழிலாளர்கள் சங்க துணை தலைவர் பாலகிருஷ்ணன்  தலைமையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டனர். அப்போது, கால்டாக்சிகளை இயக்க அனுமதிக்க வேண்டும், நிவாரண தொகையாக ₹10 ஆயிரம் வழங்க வேண்டும், இன்சூரன்ஸ் போன்ற வரியினங்களை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் கால்டாக்சி சங்கங்களை சேர்ந்த 100க்கும் பேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: