×

மாஞ்சா நூல் தயாரித்து விற்ற பெண் கைது

பெரம்பூர்: ஊரடங்கு காரணமாக சென்னையில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இவர்களில் பலர், வீட்டு மொட்டை மாடிகளில் நின்று காற்றாடி பறக்கவிட்டு வருகின்றனர். சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் பறக்க விடுவதற்கு போலீசார் தடை விதித்து இருந்தும், பல இடங்களில் தொடர்ந்து மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்க விடப்படுகிறது. இந்நிலையில், கொடுங்கையூர் பகுதியில் சிலர் வீடுகளிலேயே மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வருவதாக எம்கேபி நகர் உதவி கமிஷனர் ஹரிகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் அப்ரகாம் குரூஸ் மற்றும் போலீசார் கொடுங்கையூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, எருக்கஞ்சேரி இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனைக்கு வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக கவுரி (55) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது மகன் கோபால் (22) என்பவரை தேடி வருகின்றனர்.கஞ்சா விற்ற ரவுடி கைது: வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பேசன் பிரிட்ஜ் மேம்பாலம் அருகே, ராமலிங்க அடிகளார் கோயில் பின்புறம் கஞ்சா விற்ற பிரபல ரவுடி வினோத் (எ) மதுரை வினோத் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Manja yarn sale, woman, arrested
× RELATED சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்