தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் மாற்றம்: உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: நெல்லை லோக் அதாலத் தலைவராக இருந்த சுபா தேவி பெரம்பலூர் மாவட்ட முதன்ைம நீதிபதியாகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்த ரகுமான், நாகப்பட்டிணம் லோக் அதாலத் தலைவராகவும், புதுக்கோட்டை முதன்மை நீதிபதியாக இருந்த இளங்கோவன், மதுரை மகிளா நீதிமன்ற நீதிபதியாகவும், ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதியாக இருந்த உமா மகேஸ்வரி கரூர் லோக் அதாலத் தலைவராகவும், திருவாரூர் மாவட்ட நீதிபதியாக இருந்த கலைமதி, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிங்கேஸ்வரன் சென்னை 12வது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட நீதிபதியாக இருந்த சாந்தி, திருவாருக்கும், திருப்பூர் மாவட்ட நீதிபதியாக இருந்த கோகிலா புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாகவும், திருவள்ளூர் மாவட்ட நீதிபதியாக இருந்த தீப்தி அறிவுநிதி ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், நெல்லை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சந்திரா தஞ்சாவூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜயலட்சுமி சென்னை லோக் அதாலத் தலைவராகவும், திண்டிவனம் மாவட்ட நீதிபதியாக இருந்த பாபு மதுரை மாவட்டத்திற்கும், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த இருசன் பூங்குழலி திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், சிவகங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி செல்லம்மா கடலூர் லோக் அதாலத் தலைவராகவும், மதுரையில் இருந்த ஸ்ரீதரன் ஸ்ரீவில்லிபுத்தூர் லோக் அதாலத் தலைவராகவும், சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சரவணன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், விழுப்புரம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இருந்த அருணாச்சலம் வேலூர் லோக் அதாலத் தலைவராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 சென்னையில் இருந்த சத்யா புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதியாகவும், பூந்தமல்லியில் இருந்த சாந்தி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கும், கடலூர் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த கருணாநிதி திருச்சி மாவட்ட லோக் அதாலத் தலைவராகவும், நாகர்கோவில் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த புவனேஷ்வரி திண்டுக்கல் லோக் அதாலத் தலைவராகவும், நெல்லை மாவட்ட நீதிபதியாக இருந்த மோகன் நாமக்கல் மாவட்டத்திற்கும், புதுக்கோட்டை எஸ்சி.எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ராஜலட்சுமி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கும், தஞ்சாவூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி எழில்அரசி கடலூர் போக்சோ நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டனர்.

தஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ரவி சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கும், பூந்தமல்லி மாவட்ட நீதிபதியாக இருந்த அம்பிகா செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கும், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜயராணி பொன்னேரி நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், நாகப்பட்டினம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இருந்த கோவிந்தராஜன் திருப்பூர்  மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>