×

இலவச மின்சார பறிப்பு முயற்சியை எதிர்த்து: அரசு அலுவலகங்கள் முன் 26ம் தேதி கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்றுவருகிற  இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிறகுதான் நிதியமைச்சகம் தமிழக அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.  இதன்மூலம் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதற்கு பிறகு தமிழக அரசு எந்த வகையிலும் மத்திய அரசின் இலவச  மின்சார பறிப்பை தடுக்கமுடியாது என்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

  விவசாயிகளின் பிணத்தின் மீது நடந்து சென்று தான் மோடி அரசால் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியுமே தவிர வேறுவகையில் முடியாது.  தமிழக காங்கிரஸ் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நிற்கும்.  இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற  தமிழக அரசையும் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் முன்பாக 5 பேருக்கு மிகாமல் கையில் கறுப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ்  கட்சியினர் அனைவரும் வரும் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சமூக ஊரடங்கை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை  நடத்த வேண்டும்.



Tags : government offices ,demonstration ,protest ,announcement ,KS Alagiri , Free Electricity, Government Offices, Demonstration, KS Alagiri
× RELATED அர்ஜெண்டினாவில்...