100 சதவீத பணியாளர்களுடன் சார்பதிவாளர் அலுவலகங்கள் 6 நாள் செயல்பட வேண்டும்: ஐஜிக்கு பதிவுத்துறை செயலாளர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாரத்தில் 6 நாட்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்

பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை செயலாளர் முருகானந்தம், பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  அரசு துறைகள் அனைத்துக்கும் வழக்கமான வேலை நாட்களுடன் சனிக்கிழமையும் உள்ளடக்கி வாரத்தின் 6 நாட்களும் வேலை நாட்கள். 33 சதவீத  அலுவலர்களுடன் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் மட்டும் இனி 50% அலுவலர்களுடன் பணிபுரிவதை கடைபிடிக்க வேண்டும் என்று வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்தது.  

பதிவுத்துறை அலுவலகங்கள் கடந்த மே 3ம்தேதியின்படி அத்தியாவசிய சேவை புரியும் அலுவலகமாக கருதப்பட்டு 100% பணியாளர்களுடன் பணிகள்  நடந்து வரும் நிலையில், சனிக்கிழமை உள்ளடக்கிய வாரத்தின் 6 நாட்களும் வேலை நாட்களாக 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் வண்ணம்  தகுந்த அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>