ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை:  தேவையில்லாத ஊரடங்கை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காரியாபட்டியை சேர்ந்த வக்கீல்  பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு  வந்தது. அப்போது அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு ஊரடங்கு முடிவை  எடுத்தது. அதன் அடிப்படையில் தான் தமிழக அரசும் 144 தடை உத்தரவை  பிறப்பித்துள்ளது என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை  தள்ளுபடி செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: