உணவுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் 15ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் கிடைப்பதில்லை: ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக அறிவித்துள்ள ஊரடங்கையொட்டி ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதமும் அரிசி பெறும்  அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, பாமாயில் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

மேலும், ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி என்றும் அறிவித்தது.  அதன்படி ஒரு குடும்பத்தில் 6 பேர் இருந்தால் வழக்கமாக 20 கிலோவுடன் கூடுதலாக 30 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

ஆனால் இந்த அரிசி, மாதத்தின் முதல் 15 நாட்களில் ரேஷன் கடைகளுக்கு வருபவர்களுக்கே கிடைக்கிறது. மற்ற நாட்களில் வருபவர்களுக்கு  வழக்கமாக கிடைக்கும் 20 கிலோ அரிசி கூட ரேஷன் கடைகளில் ஸ்டாக் இல்லாததால் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. அதேபோன்று 20ம் தேதிக்கு  பிறகு பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவைகளும் பல கடைகளில் ஸ்டாக் இல்லை. உணவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பணிகளை  செய்யாததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Related Stories:

>