×

சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

ஆவடி: ஆவடி, நாராயணபுரம் பெருமாள் கோவில் தெருவில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ஆவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் அங்கு சென்றனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபகுதியைச் சேர்ந்த சங்கர் (55), அவரது மகன் மூர்த்தி (28), அவரது நண்பர் வெங்கடேசன் (32) ஆகியோரை கைது செய்தனர். 200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.Tags : Alcohol fever, 3 people arrested
× RELATED மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை: குடிமகன்கள் அதிருப்தி