ஊரடங்கு அமலினால் 8 ஆயிரம் உயிரிழப்புகளை இந்தியா தவிர்த்துள்ளது; மத்திய கொரோனா கட்டுப்பாட்டு குழுத்தலைவர்

டெல்லி: ஊரடங்கினால் 14 முதல் 29 லட்சம் கொரோனா பாதிப்புகளையும், 37 முதல் 68 ஆயிரம் உயிரிழப்புகளையும் இந்தியா தவிர்த்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பணிக்குழுக்களில் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் வி.கே.பால் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பணிக்குழுக்களில் அதிகாரம் பெற்ற குழு தலைவர் வி.கே.பால் கூறியதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால், கொரோனா வைரஸ் வழக்குகளின் வளர்ச்சி வேகத்திற்கு ஒரு பிரேக் போட முடிந்தது. ஊரடங்கினால் இறப்புகளின் வளர்ச்சி வீதமும் கணிசமாக குறைந்துவிட்டது. ஊரடங்கை செயல்படுத்த முடியாமல் அல்லது தாமதப்படுத்தி இருந்தால், பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கலாம்.

மேலும், ஊரடங்கு அமல்படுத்தியதால், இந்தியா சுமார் 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான பாதிப்புகளையும், 37 ஆயிரம் முதல் 68 ஆயிரம் உயிரிழப்புகளையும் தவிர்த்துள்ளது. தற்போது மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே நாட்டில் உள்ள மொத்த கொரோனா பாதிப்புகளில் 80 சதவீத பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த மாநிலங்களில் 90 சதவீத பாதிப்புகள் 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளன, மீதமுள்ள 10 சதவீத பாதிப்புகள் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளன. நகரங்களை பொறுத்தவரையில், மும்பை, டெல்லி, சென்னை, ஆமதாபாத், தானே, புனே, இந்தூர், கோல்கட்டா, ஐதராபாத் மற்றும் அவுரங்காபாத் ஆகிய 10 நகரங்களில் சுமார் 70 சதவீத கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>