பாகிஸ்தான் விமான விபத்து; 97 பேர் உயிரிழப்பு என தகவல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் எனவும் கூறினார். பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 85 பயணிகளும், 12 விமான பணி குழுவினரும் சேர்த்து 97 பேர் பேர் இருந்துள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியதாக முதல்கட்ட தகவல் வந்துள்ளது. விமானியின் எச்சரிக்கையை அடுத்து உடனடியாக தரையிறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Advertising
Advertising

இதனால் அந்த பகுதியை சுற்றி வருவதற்கு விமானி முடிவு எடுத்ததாகவும், அந்த பகுதியை சுற்றி வரும் சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு மிகவும் அதிகமாகி குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி இருக்கிறது  என்றும் சொல்லப்படுகின்றது. விமானத்தில் பயணம் செய்த 97 பேரின் நிலைமை என்ன ஆனது ? என்பது வருந்தத்தக்க செய்தியாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடிய பகுதியானது குடியிருப்பு பகுதியாகும். இந்நிலையில், பாகிஸ்தானில் விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: