×

பச்சை மண்டல நிலையை இழந்தது ஈரோடு; 37 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உறுதி..அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு: 37 நாட்களுக்கு பின்பு ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் மட்டும் 70 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற 69  பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். மார்ச் மாதம் தாய்லாந்தை சேர்ந்த இருவருக்கு ஈரோட்டில் கரோனா உறுதியானதை அடுத்து அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதன் பிறகு பல்வேறு கட்டங்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்பு அனைவரும் குணமடைந்தனர். இதையடுத்து கடந்த 37  தினங்களாக யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறியது. இதனால் பல்வேறு தளர்வுகள் ஈரோடு மாவட்டத்திற்கு கொடுத்து வந்த நிலையில் 37 நாட்களுக்கு பின்பு இன்று ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை  சேர்ந்த ஒருவருக்கு எலும்பு அறுவை சிகிச்சை நோய் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சேலத்துக்கு சென்றிருக்கிறார்.

அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதி  செய்யப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் வெளி நாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 92 பேர் உட்பட 786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 14, 753 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Green Zone, Erode, Corona
× RELATED மதுபானக் கொள்கை முறைகேட்டில்...