×

அமெரிக்காவில் முன்னதாகவே ஊரடங்கை அறிவித்திருந்தால் பெரும் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்: கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னதாகவே ஊரடங்கை அறிவித்திருந்தால் பெரும் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 52 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பல மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ராணுவ வீரர்களின் நினைவு தினம் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு கலிபோர்னியாவில் உள்ள முக்கிய கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை முதல் இரவு வரை மட்டுமே அனுமதி என்றாலும் மக்கள் உச்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே கொரோனாவால் உயிரிழந்தவர்கள் நினைவாக அடுத்த 3 நாட்களுக்கு தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அதிபர் டிரம்ப் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

ஆனால் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊரடங்கை முன்னதாகவே அறிவித்திருந்தால் 50% உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மார்ச் 19-ம் தேதிக்கு பிறகே அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.


Tags : Columbia University ,United States , United States, Curfew, Columbia University
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி