நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு

சென்னை: நாளை முதல் திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவு படி திருவள்ளூர் மேற்கில் கூடுதலாக 83 கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக 11 கடைகளையும் நாளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.

 சென்னையை பொறுத்தவரை 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவின்படி திருவள்ளூர் மேற்கில் கூடுதலாக 83 கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக 11 கடைகள் திறக்கப்படுகிறது என டாக்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் சென்னை, திருவள்ளூர் நீங்கலாக அனைத்து மாவட்டங்களில் இருக்க கூடிய மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சாதாரண ரகம் மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன. உயர் ரக மது பானங்கள் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்பட்டுகிறது. மேலும் சாதாரண ரகம் மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் கிடங்கில் இல்லை என்பதால் ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் தயாரிக்க சில நாட்கள் தேவை என்பதால் தற்போது கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ள நிலையில் நாளை முதல் கூடுதலாக மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>