உறவினர்கள் இறப்பு ,அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக ஓசிஐ அட்டை வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப அனுமதி!!

டெல்லி : வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடல் மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்தை செயல்படுத்தி வெளிநாடுகளில் சி்க்கியவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் ேததிவரை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்ட வந்தே பாரத் மிஷன் தி்ட்டம் மூலம் 15 ஆயிரம் இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.2-வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டம் கடந்த 16-ம்தேதி தொடங்கி 22-ம் தேதி(இன்று) வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 18 நாடுகளில் இருந்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் 3ம் கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை (Overseas Citizens of India card holders- OCI) வைத்திருப்போர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

இதற்கான சில தளர்வுகளை மத்திய அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இந்திய அடையாள அட்டை வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவசர தேவைகளுக்காக தாயகம் திரும்பலாம்.

1. உறவினர்கள் இறப்பு

2.அவசர மருத்துவ சிகிச்சை

3.திருமணமானவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தாலும்  அவர் இந்தியா வர அனுமதி

4.வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களும் தாயகம் திரும்பலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>