கொலையா ? தற்கொலையா ? தெலங்கானாவில் ஒரே கிணற்றில் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்கள் கண்டெடுப்பு : 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்!!

தெலங்கானா : தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கிணற்றில் புலம் பெயர் தொழிலாளி குடும்பத்தினர் 9 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில், சந்தோஷ் என்பவர் கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வந்தனர்.

இந்த கோணிப்பை தொழிற்சாலையில் தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கரிமாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஊரடங்கு காரணமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டதை அடுத்து பொருளாதார நெருக்கடி காரணமாக, மசூத் மற்றும் அவரது குடும்பத்தினரும் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான குடோனில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மசூத் மற்றும் குடும்பத்தினரை காணவில்லை என்று குடோன் உரிமையாளர் சந்தோஷ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அச்சமயம் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில், நேற்று சிலரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.இதனையடுத்து, கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலம் மீட்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மசூத், அவருடைய மனைவி நிஷா, கணவனை விட்டு பிரிந்து வாழும் மகள் புஸ்ரா, புஸ்ராவின் மூன்று வயது மகன் ஆகியோரின் உடல்களை போலிசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இன்று மேலும் 5 சடலங்கள் அதே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மசுத் மகன் சபாக், பீகாரைச் சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம் மற்றும் ஷாம், திரிபுராவைச் சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை அதே கிணற்றிலிருந்து போலீசார் கைப்பற்றினர்.கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே கிணற்றில் இருந்து இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 9 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் இறந்துபோன 9 பேரும் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>