×

ரசிகர்களுக்கு பதில் செக்ஸ் பொம்மைகள்!: கால்பந்து அணிக்கு அபராதம்

தென் கொரியாவில்  பிரபலமான  கே லீக் கால்பந்து தொடர் பூட்டிய அரங்கில்  ரசிகர்கள் இல்லாமல்  மே 8ம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.  
ஒரு போட்டியின்போது  எப்சி சியோல் அணி சார்பில் கேலரியில்  26 பெண் பொம்மைகளையும், 2 ஆண் பொம்மைகளையும் வைத்தனர். இதை  பார்த்து வீரர்கள் உற்சாகமானார்களோ இல்லையோ அரங்கில் இருந்த போட்டி அமைப்பாளர்கள் ஆச்சர்யமடைந்தனர். நேரடி ஒளிபரப்பை பார்த்த ரசிகர்களுக்கோ அதிர்ச்சி.

காரணம், செக்ஸ் பொம்மைகளுக்கு எப்சி சியோல் அணியின் சீருடை வண்ணத்தில் உடைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன. இந்த சர்ச்சையால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விதிமுறைகளை மீறியதற்காக   அந்த கிளப்புக்கு 61.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வருத்தம் தெரிவித்துள்ள கிளப் நிர்வாகிகள், அந்த பொம்மைகள்  பாலியல் பயன்பாட்டிற்கானவை கிடையாது என மறுத்துள்ளனர்.Tags : fans ,Football team , Fans, sex toys, football team
× RELATED ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல்?எல்லா போட்டியும், ஒரே ஊரில்!